Search
Saturday 16 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மகிந்த மீது போர்க் குற்ற விசாரணை நடத்தப்படும்: கருணாநியிடம் அமைச்சர் வேலாயுதம்

மகிந்த மீது போர்க் குற்ற விசாரணை நடத்தப்படும்: கருணாநியிடம் அமைச்சர் வேலாயுதம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீதான போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இலங்கையின் பெருந்தோட்டத்துறை  அமைச்சர் வேலாயுதம் தெரிவித்திருக்கின்றார்.

தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்யும் அமைச்சர் வேலாயுதம், தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினார்.

அதன்பின் அமைச்சர் வேலாயுதம் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”தி.மு.க. தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தற்போது உள்ள அரசியல் மாற்றம் குறித்தும், அரசியல் சூழ்நிலை குறித்தும், தமிழ் மக்களின் நிலை குறித்தும் அவரிடம் எடுத்து கூறினேன்.

மகிந்தர ராஜபக்ஷ மீதான போர்க் குற்றம் குறித்து இலங்கை அளவில் விசாரணை மேற்கொள்ளப்படும். முகாம்களில் உள்ள தமிழர்கள் மீண்டும் அவர்கள் வாழ்விடத்திற்கு செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம். மேலும், இராணுவம் அதிகம் உள்ள முகாம்களில் இருந்து ராணுவத்தினர் திரும்ப பெறப்படுவார்கள்.

100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு வேலை வழங்கி வருகிறோம். அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். பாடச்சாலைகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறோம். மலைவாழ் தமிழர்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

உலகம் முழுவதும் இலங்கை அகதிகள் என்ற வார்த்தை இருக்க கூடாது என்று விரும்புகிறோம். அதனால், மற்ற நாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும். இலங்கையில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. அவர்கள் நிம்மதியாக வாழலாம். விருப்பம் உள்ளவர்கள் வரலாம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை” என்றார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *