Search
Friday 21 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மக்களால் நிறைந்த ஜே.வி.பியின் கூட்டம் : அனுரகுமாரவின் உறுதிமொழி

மக்களால் நிறைந்த ஜே.வி.பியின் கூட்டம் : அனுரகுமாரவின் உறுதிமொழி

மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பழுது ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டேன். எமது போராட்டம் நிச்சியமாக வெற்றியடையும் என ஜே.வி.பி ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடலில் ஜனாதிபதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்ட பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதற்கு பாதிப்பு ஏற்படுவதற்கு நான் இடமளிக்க மாட்டேன் என்பதனை மக்களுக்கு உறுதியளிக்கின்றேன். இந்த போராட்டத்தை வெற்றிக்காள்வோம். இது நிச்சயமாக வெற்றியில் முடிவடையும் போராட்டமே. மக்கள் இம்முறை சரியான பாதையை தெரிவு செய்வார்கள் என நினைக்கின்றோம். பொதுமக்களுக்காக மகிழ்ச்சி , சுதந்திரத்தை கொண்டு வரும் ஆரோக்கியமான பாதை உள்ளது. அந்த பாதையில் பயணிப்போம் என மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். என அவர் தெரிவித்துள்ளார். -(3)IMG_2008 69084565_1294816047339506_6325823327575212032_n


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *