Search
Monday 10 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மக்களினது பார்வையை வேறு பக்கம் திருப்பி அரசியலமைப்பை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சி – மகிந்த அணி குற்றச்சாட்டு

மக்களினது பார்வையை வேறு பக்கம் திருப்பி அரசியலமைப்பை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சி – மகிந்த அணி குற்றச்சாட்டு

நாட்டினதும் பாராளுமன்றத்தினதும் அவதானத்தை கண்டி வன்முறையின் பக்கம் திருப்பி ”வலுக்கட்டாமயாக காணாமல்போவதிலிருந்து அனைவரையும் பாதுகாத்தல்” தொடர்பான சட்ட மூலத்தை பலவந்தமாக நிறைவேற்றதை போன்று புதிய அரசியலமைப்பையும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
வலுக்கட்டாயமாக காணாமல்போவதிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் சட்டத்துக்கு மகாநாயக்க தேரர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமையால் இரண்டு தடவைகள் நாடாளுமன்றில் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டும் அது கைவிடப்பட்டது. ஆனால், கண்டியில் ஏற்பட்ட மோதல் அமைதியின்மை நிலைமையை பயன்படுத்தி நாட்டின் பார்வையை வேறு திசையில் செலுத்தி மாகாநாயக்க தேரர்களின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு அதனை அரசாங்கம் நிறைவேற்றிக்கொண்டுள்ளது. நாட்டினதும் பாராளுமன்றத்தினதும் பார்வையை வேறு பக்கம் திருப்பிவிட்டு நாட்டுக்கு பாதிப்பான சட்ட மூலங்ளை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்வதற்கும் அந்த நடவடிக்கைகளையே பின்பற்ற திட்டமிட்டுள்ளது. என நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அந்த கட்சியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *