தலைப்பு செய்திகள்

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு இல்லாத வகையில் சேவைகள் , உதவிகளை தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு இல்லாத வகையில் சேவைகள் , உதவிகளை தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் பரவுவதை தடுக்கும் அரசாங்கத்தின வேலைத்திட்டத்துடன் மக்கள் வாழ்க்கையை இயல்புநிலையில் பேணுவதற்காக தேவையான சேவைகளை தொடர்ச்சியாக வழங்குதற்கான பணிகள் முறையாக முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைவாக நெறிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி செயலணி தனது பணிகளை முன்னெடுத்திருப்பதாக செயவணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய (25) தினம் இந்த செயலணியின் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. அனைத்து மாவட்ட செயலாளர்கள், வங்கித் தலைவர்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் தொடர்புபட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர் இதன் போது செயவணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ உரையாற்றுகையில்
நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் -19) பரவுவதை தவிர்ப்பதற்கு மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் பொறிமுறையொன்று தாபிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மற்றும் சிறப்பங்காடிகள் இணைந்து பிரதேச பொறிமுறையொன்றின் மூலம் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும்; தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக சுகாதாரத் துறை முன்னெடுத்து வரும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவானதாக இந்தன்னணிகள் இருக்க வேண்டும். மக்கள் வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அத்தியாவசிய சேவைகளை பேணுவது முக்கியமானதாகும் என்று தெரிவித்த அவர் விவசாயிகள், தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டதாகவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அரிசி, தேங்காய், மரக்கறி, முட்டை, கோழி இறைச்சி போன்றவற்றை தட்டுப்பாடின்றி வழங்கக் கூடிய நிலை உள்ளது. இவற்றை விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்து உரிய முறையில் கொள்வனவு செய்து கூட்டுறவு மற்றும் சிறப்பங்காடி விற்பனை நிலையங்களுடன் இணைந்து அத்தியாவசிய உணவுப் பொதியொன்றினை தயார் செய்து பிரதேச பொறிமுறையின் மூலம் முறையாக பகிர்ந்தளிக்க முடியும் என பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். அவற்றை அந்தந்த மக்கள் பிரிவினர் எதிர்பார்க்கும் வகையில் பல்வேறு விலைகளில் தயாரித்து வழங்க முடியும். இந்த நடைமுறையை நெறிப்படுத்துவதற்கு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவியும் பெறப்படும்.
அரசாங்க வைத்தியசாலைகளில் பதிவுசெய்து தொடர்ச்சியாக மருந்துகளை கொள்வனவு செய்யும் நோயாளிகளுக்கு உரிய மருந்து பட்டியல்களின் படி வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பாதுகாப்புத் துறையின் பங்களிப்பு இதற்கு பெற்றுக்கொள்ளப்படும். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *