Search
Monday 19 August 2019
  • :
  • :

மக்களுக்காக உயிரை தியாகம் செய்யவும் தயார் : சஜித்

மக்களுக்காக உயிரை தியாகம் செய்யவும் தயார் : சஜித்

நான் எதற்கும் பயந்தவனல்ல. மக்களுக்காக நான் உயிரை விடவும் தயாராகவே இருக்கின்றேன். எனது தந்தை மக்களுடன் இருந்தார். அதேபோன்று நானும் இருப்பேன். நான் எதிர்வரும் நவம்பரில் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வது உறுதியானது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற சஜித்துக்கு ஆதரவான கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஆட்சிக்கு வருவது உறுதியாகும். நாங்கள் நாட்டை நிர்வகிக்கும் முறைமைகளுடன் அதனை முன்னெடுத்துச் செல்வோம். நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கையெடுப்போம் என்பதுடன் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைகளையும் தீர்க்க நடவடிக்கையெடுப்போம். அத்தோடு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கையெடுப்போம். என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *