Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மக்களும் வாக்குகளுக்கு பணம் பெறும் நிலையை முற்றாக தவிர்க்க வேண்டும்- வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்

மக்களும் வாக்குகளுக்கு பணம் பெறும் நிலையை முற்றாக தவிர்க்க வேண்டும்- வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்

கோத்தாபயவின் கூட்டத்திற்கு ஆட்களை அதிகப்படுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக பேருந்துகளில் நிறையவே மக்களை ஏற்றி வந்திருந்தார்கள். ஓட்டுக்களை பணம் கொடுத்து வாங்கி மக்களை தேர்தல் அடிமைகளாக்க நினைக்கின்றார்களா? சில பேரினவாதிகள்.இவ்வாறான நிலையை பார்க்கும் போது இந்தியாவின் தேர்தல் நிலமைகளைப் போல் மாற்ற நினைக்கிறார்கள்.மக்களும் வாக்குகளுக்கு பணம் பெறும் நிலையை முற்றாக தவிர்க்க வேண்டும். தேர்தல் அதிகாரிகள் இவை சம்பந்தமான விடயங்களில் மிகவும் கரிசனையோடும் அவதானமாகவும் செயற்பட வேண்டும் என்றும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

மேலும் தேர்தல் திணைக்களங்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் இவ்வாறான செயற்பாடுகளை அடையாளம் கண்டு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அல்லது எதிர்காலத்தில் தேர்தல் நீதியான ஜனநாயக போக்கான தேர்தலை நடத்த முடியாமல் போய்விடும். மக்களின் உரிமைகளை விலை கொடுத்து வாங்கி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிடும் நிலை வந்துவிடும் என தெரிவித்தார்.அண்மையில் முல்லைத்தீவில் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு ஆட்களை கொண்டுவருவதற்காக நபருக்கு 1000 ரூபா தொடக்கம் 5000 ரூபா வரையில் வழங்கப்பட்டுள்ளது .8

கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களை மீண்டும் அவர்களது இடங்களில் இறக்கிவிடும் பொழுது இந்த பணப்பரிமாற்றங்கள் பெருமளவில் நடைபெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது மதுப் போத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது.கோத்தாபயவின் கூட்டத்திற்கு ஆட்களை அதிகப்படுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக பேருந்துகளில் நிறையவே மக்களை ஏற்றி வந்திருந்தார்கள். ஓட்டுக்களை பணம் கொடுத்து வாங்கி மக்களை தேர்தல் அடிமைகளாக்க நினைக்கின்றார்களா? சில பேரினவாதிகள்.இவ்வாறான நிலையை பார்க்கும் போது இந்தியாவின் தேர்தல் நிலமைகளைப் போல் மாற்ற நினைக்கிறார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *