Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மக்கள் கேட்காத எதையும் இந்த நாட்டில் திணிக்க வேண்டாம்

மக்கள் கேட்காத எதையும் இந்த நாட்டில் திணிக்க வேண்டாம்

இந்த நாட்டு மக்கள் அரசாங்கத்திடம் எதைக் கேட்கின்றார்களோ அதை மாத்திரமே மக்களுக்கு வழங்க வேண்டும். அதை தவிர்த்து மக்கள் கேட்காத எதையும் இந்த நாட்டில் திணிக்க வேண்டாம்.  நாட்டுக்கு  புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியமில்லை  என நான்கு மகாநாயக்க தேரர்களும் தெரிவித்துள்ளனர்.

நிறைவேற்று அதிகாரம் இருக்க வேண்டும் எனவும், பெளத்த மத நடவடிக்கைகள்  பலமடைய வேண்டும் எனவும் உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலேயே   இலங்கை தேசிய மகா சங்க சபையின் தலைவர் அதுரலியே ரதன தேரர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதையும் தாண்டி அரசாங்கம் தமக்கு தேவையான வகையில் அரசியல் அமைப்பை உருவாக்க முயற்சித்து வருகின்றது என்றால் அதை தடுக்க வீதியில் இறங்கி போராடவும் நாம் தயாராக உள்ளோம்.இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்தவர்கள்  தமது தேர்தல் கொள்கையில் மக்கள் கருத்துக்கு அப்பால் சென்று எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப்போவதில்லை என வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடர்ச்சியாக இதனை தெறிவித்துள்ளனர். ஆனால்  இன்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விடவும் சிவில் அமைப்புகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளே அதிகமாக உள்ளன.

சிவில் அமைப்புகள் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் நபர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்துள்ளனர்?  அவர்களுக்கு எங்கிருந்து மக்கள் வரம் கிடைத்தது. அவர்கள் நினைப்பவற்றை அரசியலில் செய்துகொள்ள யார் அதிகாரம் வழங்கியுள்ளனர். இவர்களால் முடிந்தால் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கிக்காட்டட்டும்.

யார் இதை முன்னெடுத்து வந்தாலும் அதை தோற்கடிக்க நாம் முன்வருவோம். இந்த நாட்டில் மகாநாயக தேரர்களின் கருத்துகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும். அதை எதிர்த்து எவரும் எதையும் மேற்கொள்ள முடியாது.

அரசியல் அமைப்பு குறித்த ஆலோசனைகள் குழுவிலும்,வழிநடத்தல் குழுவிலும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்களே அதிகமாக உள்ளனர். அவர்கள் மாத்திரமே அரசியல் அமைப்பை கொண்டுவரும் திட்டத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு  வருகின்றனர். நல்லாட்சி என்ற பெயரில் அவர்களின் தேவைக்காக அரசியல் அமைப்பு ஒன்றை கொண்டுவர முடியாது.

இந்தநாட்டில் நிறைவேற்று அதிகாரம் நீக்கப்பட்ட பின்னர்  குழப்பம் ஒன்று ஏற்பட்டால் பிரதமர் எவ்வாறு செயற்படப்போகின்றார்? அவரால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை  பெற முடியாது. முதலில் கட்சிகள் இரண்டும் இணங்கும் வேலைத்திட்டங்களை மாத்திரம் இந்த அரசாங்கத்தில் முன்னெடுப்போம். அதை விடுத்து நாட்டில் குழப்பங்களை கொண்டுவரும் நாட்டின் ஐக்கியத்தை அழிக்கும் நடவடிக்கைகளை கைவிடுவோம் என்றார்.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *