Search
Friday 15 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மடு திருத்தல பிரதேசம் புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டமை மகிழ்ச்சி அளிக்கிறது: விக்னேஸ்வரன்

மடு திருத்தல பிரதேசம் புனித பூமியாக  பிரகடனப்படுத்தப்பட்டமை மகிழ்ச்சி அளிக்கிறது: விக்னேஸ்வரன்

மன்னார் மாவட்டத்தில் மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசம் புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளளதாவது,

சுமார் 450 ஆண்டுகள் வரலாறுகொண்ட மடு திருத்தலம், கத்தோலிக்க பக்தர்களின் யாத்திரைக்குரிய புனித தலமாக மட்டுமன்றி பௌத்த மற்றும் இந்து பக்தர்களினதும் வழிபாட்டிற்குரிய தலமாகவும் ஒற்றுமையின் சின்னமாகவும் விளங்கி வருகின்றது. இத்தகைய பெரும் சிறப்பு மிக்க இந்த மடு தேவாலயத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்துவதற்கு அயராது பாடுபட்ட கத்தோலிக்க குருமார்களுக்கும் மற்றையோருக்கும் எனது பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்வதுடன் அவர்களின் கோரிக்கையை ஏற்று அங்கீகாரம் அளித்து நடவடிக்கை எடுத்த அமைச்சரவை உறுப்பினர்களுக்கு மற்றும் ஜனாதிபதிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வணக்கத்திற்குரிய பாப்பாண்டவர் பிரான்சிஸ் மடு வந்தபோது அவரைச் சந்திக்கும் பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நவீன காலத் தெய்வ மனிதர்களில் அவரும் ஒருவரே.

மடு திருத்தல பிரதேசம் புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக, போர் நடைபெற்ற காலத்தில் மிக மோசமாக பாதிப்புக்களுக்கு உள்ளான மடு திருத்தலம் மேன்மேலும் வளங்களையும் சிறப்புகளையும் பெற்று எமது மக்களுக்கு தொடர்ந்தும் நல்லமுறையில் இறை பணிகளையும் சமூக பணிகளையும் ஆற்றும் என்று எதிர்பார்க்கின்றேன்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *