Search
Friday 25 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மட்டக்களப்பு செங்கலடியில் விசமிகளினால் பிள்ளையார் சிலை உடைப்பு

மட்டக்களப்பு செங்கலடியில் விசமிகளினால் பிள்ளையார் சிலை உடைப்பு

மட்டக்களப்பு – செங்கலடி எல்லை வீதியில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைத்தெறியப்பட்டுள்ளது.செங்கலடி எல்லை வீதியில் செங்கலடி உதயசூரியன் உதவிக்குழு அமைப்பினரால் அண்மையில் இவ் வழிப்பிள்ளையார் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் இவ் வழிப்பிள்ளையார் சிலை அமைப்பதற்கு பல்லாண்டு காலமாக அதாவது, யுத்தகாலத்தின் முன்னிருந்து வீதியோரமாக காடு பற்றியிருந்த சிறு இடத்ததை துப்பரவு செய்து தாம் இச்சிலையை அமைத்தாகவும் தெரிவித்தனர்.

இந்த சிலையை அமைக்கும் போதே பல எதிர்ப்புக்கள் வந்ததாகவும் தெரிவித்தனர். இப்பிள்ளையார் சிலையை உடைத்தெறிந்த விசக்கிரிமிகள் யாராக இருந்தாலும் தமிழர் வாழும் இப் பகுதியில் இவ்வாறான கீழ்த்தனமான வேலையை செய்வதை இத்துடன் நிறுத்த வேண்டும் எனவும் உதயசூரியன் உதவிக் குழுவினர் கண்டனம் தெரிவித்தனர்.நேற்றிரவு சுமார் 08 மணியளவிலேயே இவ் வழிப்பிள்ளையார் முன்றலில் நின்று தாம் சென்றதாகவும் அப்போது அந்த பிள்ளையார் சிலை அந்த இடத்தில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே நள்ளிரவு வேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.(15)1 2


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *