Search
Saturday 24 February 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மட்டுவில் டிப்பர் வாகனத்தின் முன் சில்லின் ரயர் வெடித்ததில் அதன் சாரதி காயமடைந்துள்ளார்

மட்டுவில் டிப்பர் வாகனத்தின் முன் சில்லின் ரயர் வெடித்ததில் அதன் சாரதி காயமடைந்துள்ளார்
சாவகச்சேரி-மட்டுவில் கிழக்குப் பகுதியில் நேற்று இரவு டிப்பர் வாகனத்தின் முன் சில்லின் ரயர் வெடித்ததில் அதன் சாரதி காயமடைந்துள்ளார்.
அக்கரையான் 4 ஆம் கட்டையை சேர்ந்த இரத்தினசிங்கம் பிரபாகரன் (வயது-32) என்பவரே கால் முறிந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிசைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து வலிகாமம் நோக்கி பயணித்த குறித்த டிப்பர் வாகனத்தின் முன்பக்க சில் ரயர் காற்றுப் போய் வெடித்ததில் வாகனம் அங்குள்ள கடை ஒன்றினுள் புகுந்ததாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *