Search
Friday 24 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திர முறைமை இரத்து

மணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திர  முறைமை  இரத்து

கட்டட நிர்மாணங்களுக்காக மண், மணல் மற்றும் களிமண் என்பவற்றை ஏற்றிச் செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திர முறையை நேற்று முதல் ரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று தெரிவித்தார்.
மணல், மண் மற்றும் களிமண் ஆகியவற்றை வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்காக தற்பொழுது நடைமுறையில் உள்ள அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் தேவையின் காரணமாக உள்ளுர் தொழில்துறைகளைப் போன்று நிர்மாண தொழில்துறைக்கும் தேவையான மூலப்பொருட்களை விநியோகிப்பதில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக அமைச்சரவை அங்கத்தவர்கள் பலரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு மணல், மண் மற்றும் களிமண் ஆகியவற்றை வாகனங்களில் ஏற்றிச்செல்வதற்காக தற்பொழுது நடைமுறையில் உள்ள அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் தேவை உடனடியாக அமுலுக்கு வருவதை நீக்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இது ஒரு வார காலத்திற்கு பரீட்சார்த்தமாகவே இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்பின்னரே இதனை நிரந்தரமாக்குவதா? இல்லையா? என்பது பற்றி இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *