Search
Thursday 26 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மணிவண்ணனை பதவி நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

மணிவண்ணனை பதவி  நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குத் தேர்ந்து அனுப்பப்பட்ட வி.மணிவண்ணன், தமது பங்காளிக் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதால் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு அந்தக் கட்சி யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கேட்டுக்கொண்டது.அதனடிப்படையில் வி.மணிவண்ணனின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவி வறிதாகியதாக யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரால் அவருக்கு அறிவிக்கப்பட்டது.தனது உறுப்புரிமை நீக்கத்தை சவாலுக்குட்படுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சிறப்பு மனுவை தானே தாக்கல் செய்தார் .இந்நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கு 14 நாட்கள் இடைக்காலத் தடை விதித்து யாழ்ப்பாணம் மாவட்டம் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இந்த மனு நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமக்கமலன் முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போதே மனுதாரரின் விண்ணப்பம் தொடர்பில் ஆராய்ந்து இன்று கட்டளை வழங்கப்படும் என்று நீதிபதி தவணையிட்டார்.இதன்படி குறித்த மனு இன்று மாவட்ட நீதிபதி விநாயகமூர்த்தி இராமக்கமலன் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது “மனுதாரரின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு பிரதிவாதிகளை நவம்பர் 11ம் திகதி மன்றில் முன்னிலையாக அறிவித்தல் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.மனுதாரரின் இடைக்கால நிவாரணமான அவரை யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானத்துக்கு 14 நாள்கள் இடைக்காலத் தடை உத்தரவு விதிக்கப்படுகிறது என்று நீதிபதி கட்டளை வழங்கினார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *