தலைப்பு செய்திகள்

மதங்களை மதித்த மறவர்கள் 

மதங்களை மதித்த மறவர்கள் 

இரத்தமும் சதைகளும் அழுகை சத்தமும் கேட்ட
யுத்தத்தின் வடுக்களை  எம்முடன் சுமந்தவர்  நாம் !
முற்றத்தில் வீழ்ந்த பெரும் குண்டுகள் வெடித்துச்  சிதற
செத்தவர் பலரை கண்களால் கண்ட சாட்சிகள் நாம் !

தேவாலயங்கள், ஆலயங்களை எதிரிகள்  தேடியழிக்கையில்
பாவ புண்ணியக் கணக்குகள் ஏதும் பார்க்கவேயில்லை…!
ஏவு கணைகளை எம்மினத்தின் மீது ஏவிக் கொல்லகையில்
காவு கொள்ளப்பட்டவர்க்கழ   உலகின் கண்களில் கண்ணீரில்லை !

மதங்களை மதித்துப்  போரிட்ட மறவர்களைக் கண்டோம்
மதம் கொண்டு ஈழத்தில்  தமிழினத்தை அழித்தவரை எதிர்க்க
அறவழி நின்றே  அவர்கள்  போர்களை  நடாத்தியது கண்டோம்
புறமுதுகில்  பகைவரை  குத்திட  என்றும் அவர்கள் நினைத்ததேயில்லை
-கொற்றவை


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *