Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மதுபோதையில் மோட்டர் சைக்கிளில் தப்பியோடிய வவுனியா நகரப் பாடசாலை ஆசிரியர் மடக்கிப் பிடிப்பு

மதுபோதையில் மோட்டர் சைக்கிளில் தப்பியோடிய வவுனியா நகரப் பாடசாலை ஆசிரியர் மடக்கிப் பிடிப்பு

வவுனியா நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் போக்குவரத்து பொலிசாருக்கு நிறுத்தாது தப்பி ஓடிய நிலையில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, உள்வட்ட வீதியில் நேற்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் உள்ளவட்ட வீதியில் மோட்டர் சைக்கிளில் பயணித்த போது போக்குவரத்து பொலிசார் அவரது மோட்டர் சைக்கிளை நிறுத்தியுள்ளனர். ஆனால் அவர் மோட்டர் சைக்கிளை நிறுத்தாது தப்பிஓடியுள்ளார். பொலிசார் தொடர்ந்து விரட்டிய போது புகையிகயிரத நிலையத்திற்கு அண்மையில் தனது மோட்டர் சைக்கிளை நிறுத்தி விட்டு ஓடியுள்ளார். மோட்டர் சைக்கிளை கைப்பற்றிய பொலிசார் தொடர்ந்து குறித்த ஆசிரியரை விரட்டிப் பிடித்தனர்.

இதன்போது குறித்த ஆசிரியர் மது போதையில் இருந்தமை தெரியவந்ததுடன் ஆசிரியரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களும் இருக்கவில்லை. இதனையடுத்து குறித்த ஆசிரியரை கைது செய்த போக்குவரத்து பொலிசார் அவரை பதில் நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தினர். இதன்போது குறித்த ஆசிரியரை ஒருநாள் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, குறித்த ஆசிரியருக்கு எதிராகவே அவதூறாக மாணவர்கள் இருவர் துண்டுபிரசுரம் ஒட்டியதாக அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *