Search
Sunday 24 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மதுஷை இலங்கைக்கு கொண்டு வர தடையுத்தரவு விதிக்க கோரி நீதிமன்றத்தில் மனு

மதுஷை இலங்கைக்கு கொண்டு வர தடையுத்தரவு விதிக்க கோரி நீதிமன்றத்தில் மனு

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துர மதுஷை இலங்கைக்கு அழைத்து வருவத்கு தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி அவரின் உறவினர் ஒருவரினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவரின் சின்னம்மா ஒருவரினாலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று (14) உயர் நீதிமன்றத்தில் அந்த மனுவை தாக்கல் செய்துள்ள அவர் கைதியை கைமாற்றுவதற்கான உதர்பன ஒப்பந்தத்தில் இலங்கை – ஐக்கிய அரபு இராஜ்சியம் என்பனவற்றுக்கிடையே கையொப்பமிடாத நிலையில் அவரை இங்கு அழைத்து வர முடியாது எனவும் அது அரசியலமைப்பை மீறும் செயலெனவும் உத்தரவிடுமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரியான பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதிப் உள்ளிட்ட 5 பேரின் பெயர்கள் அதில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *