Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மத்தியக் கிழக்கிலுள்ள 20,000 இலங்கையர்கள் வேலை இழக்கும் அபாயத்தில்

மத்தியக் கிழக்கிலுள்ள 20,000 இலங்கையர்கள் வேலை இழக்கும் அபாயத்தில்

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களில் 20,000 பேர் வரையிலானோர் வேலையிழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
உலகலாவிய கொரோன வைரஸ் தொற்று நிலைமையில் மத்திய கிழக்கு நாடுகளில் நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சில நிறுவனங்கள் ஊழியர் குறைப்பு மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அத்துடன் சில நிறுவனங்கள் உழியர்களுக்கு பகுதியாளவிலான சம்பளத்தையே வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலைமையில் அங்கு பணியாற்றும் ஊழியர்களில் 20,000 பேர் வரையிலானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்தந்த நாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களினூடாக நெருக்கடிக்குள்ளான இலங்கையர்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *