Search
Friday 17 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மத்திய கிழக்கில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

மத்திய கிழக்கில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் அவதானத்துடன் இருக்குமாறும் தேவையற்ற பயணங்கள், ஒன்றுகூடல்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் உங்கள் கடவுச்சீட்டை எச்சந்தர்ப்பத்திலும் தயார் நிலையில் வைத்திருக்கும்படியும் இலங்கைத் தூதுவராலயம் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் போர்ச் சூழல் காரணமாக வளைகுடா நாடுகளிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.இதனையடுத்து, அங்கு அந்ததந்த நாடுகளில் தங்கியிருக்கும் பிரஜைகளை அவதானமாக செயல்படுமாறும், அவர்களை எச்சரிக்கையோடு இருக்குமாறும் தூதரங்கள் அறிவுறுத்துகின்றன.இந்நிலையில், சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களை அவதானமாக இருக்குமாறு சவூதிக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.(15)8


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *