Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மனச்சாட்சியின் வெளிபாடும் காலம் பிந்திய ஞானமும்

மனச்சாட்சியின் வெளிபாடும் காலம் பிந்திய ஞானமும்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் அதிகளவு கொல்லப்பட்டது தமிழ்க் கிறித்தவ மக்கள். சிங்களக் கிறிஸ்த்தவ மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்விலிலை. ஆகவே பௌத்த சிங்கள மக்கள் ஆதிரமடைந்து முஸ்லிம் மக்கள் மீது ஏன் தாக்குதல் நடத்த வேண்டுமென யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் கத்தோலிக்கத் திருச் சபையின் பாதுகாவலன் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. போரின் வலியை கடந்த 30 ஆண்டுகளாக எதிர்நோக்கிய தமிழ்ச சமூகம் மற்றுமொரு சமூகம் தாக்கப்படுவதை ஒருபோதும் அனுமதியாது எனவும் அந்த ஆசிரியர் தலையங்களத்தில் கூறப்பட்டுள்ளது. மனச்சாட்சியின் வெளிபாடும் காலம் பிந்திய ஞானமும் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த ஆசிரியர் தலையங்கத்தின் முழுவிபரமும் வருமாறு.

இலங்கை அனைத்து மக்களுக்கும் பொதுவான நாடு. அது தனியே பௌத்த மாதத்திற்கு மாத்திரம் சொந்தமான நாடு அல்ல. அப்படிக் கூறவும் முடியாதென நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின மூத்த அமைச்சரொருவர் அதுவும் பௌத்த சமயத்தைச் சேர்ந்த அமைச்சரொருவர் இவ்வாறு கூறியுள்ளமை மனச்சாட்சியின் வெளிப்பாடு. நீண்ட வரலாறு கொண்ட இலங்கைத் தீவில் தமிழ் சிங்கள இன முரண்பாடு 1920 ஆம் ஆண்டு இலங்கைத் தேசிய இயகத்தின் பிளவுடன் ஆரம்பித்தது எனலாம். எனினும் இன்று வரை அதற்குப் பின்னால் வந்த சிங்கள அரசியல் தலைவர்கள் சிலர் இனமுரண்பாட்டு;க்கான காரணங்களை ஓரளவக்கேனும் அல்லது ஒப்பாசாரத்துக்கேனும் தெரிந்து கொண்டனர். அல்லது தெரிந்து கொண்டது போல காண்பித்தனர்.

இலங்கையில் சிங்களம் தமிழ் என்ற இரண்டு தேசிய மொழி பேசுகின்ற மக்கள் வாழ்கின்றனர். பௌத்தம், கிறிஸ்த்தவம். சைவம். இஸ்லாம் என்ற நான்கு சமயங்களைப் பின்பற்றும் மக்கள் வாழ்க்கின்றனர். ஆகவே இலங்கை பல்லிண சமூகம் வாழும் நாடு என்பது கண்கூடு.

இவ்வாறானதொரு நிலையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரானன சூழலில் தமிழர் அரசியல் வேறுதளத்திற்கு மாறியது. தமிழ்த் தலைமைகள் அந்தத் தளத்தை குறிப்பாக சர்வதேச மயப்பட்டுள்ள ஈழத் தமிழர் அரசியலை சரியான முறையில் ஒழுங்குபடுத்தவில்லை. இலங்கைத் தீவு நோக்கிய பூகோள அரசியல் என்பது 2009 ஆம் ஆண்டு மாதத்திற்கு முன்னரான சூழலில் இருக்கவில்லை. அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் அவ்வப்போது இலங்கைக்கு உதவிபுரிந்திருந்தாலும் இலங்கையில் கால்பதித்து ஆதிக்கம் செலுத்தும் நிலையை அந்தச் சூழல் ஏற்படுத்தவில்லை.

இந்த நாடுகளின் உதவியோடு ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டம் ஏன் அழிக்கப்பட்டது என்பதை அரசியல் ஆய்வாளர்கள் பலர் கூறியுள்ளனர். குறிப்பாக இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டுமென அமெரிக்கா, இந்திய மத்திய அரசின் ஆசீர்வாதத்துடன் இலங்கை மீது நாட்டம் கொண்டிருந்தது. ஆனால் இலங்கைத் தீவில் நடக்கும் போர் அதற்கு ஆபத்தானது என்ற அடிப்படையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஈழப்போராட்டம் இல்லாதொழிக்கப்பட்டது.

அத்துடன் விடுதலை வேண்டிப் போராடும் தேசிய இனங்களின் ஆயுதப் போராட்;டம் நியாயமானது என்ற கருத்தை உலக அளவில் நிறுவி விடக்கூடாதென்பதும் அமெரிக்கா போன்ற நாடுகளின் மற்றுமொரு நோக்கமாகவும் இருந்தது. அதற்காகவே ஈழத்தமிழரின் போரை இல்லாதொழித்து உலகத்துக்கு உதாரணம் காண்பிக்கப்பட்டது. அதாவது மரபுவழி இராணுவத்தைக் கொண்ட பலமிக்க விடுதலை இயக்கம் ஒன்று இலங்கையில் அழிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி உலகில் உள்ள ஏனைய இயக்கங்களுக்குப் பாடமாக அமைய வேண்டும் என்பது அதன் உள்நோக்கமாக இருந்தது.

2001 ஆம் ஆண்டு பின்லேடன் அமெரிக்காவில் நடத்திய தாக்குதலின் பின்னர், இவ்வாறன சிந்தனை மேற்குலக நாடுகளுக்கு ஏற்பட்டது. ஆனாலும் ஈழத்தமிழர் போராட்டம், இஸ்லாமியவாதிகளின் போராட்டம் போன்றதல்ல. அது விடுதலைப் போராட்டமென்று அமெரிக்கா போன்ற மேற்குலகத்துக்கு நன்கு தெரியும். எனினும் பயங்கரவாதம் என்ற போர்வையில் உலகளாவிய இயக்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு ஈழத்தமிழரின் ஆயுதப் போராட்டமும் விதிவிலக்கல்ல என்ற நிலையை ஏற்படுத்திவிட்டது. ஆனாலும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட மிகமோசமான தமிழ் இன அழிப்புக்கு மேற்குலம் ஆதரவல்ல. எனினும் அதன் பின்னரான சூழலில் தமிழ்த் தலைமைகள் சரியான புரிதலை ஜனநாயக வழியில் உலகத்துக்குக் கொடுக்கவில்லை. ஐஎஸ் இஸ்லாமியவாதிகள் உயிர்த்த ஞாயிறன்று நடத்திய தாக்குதலின் பின்னரான தமிழரின் நிலை தொடர்பாகக் கூடவேணும் சரியான புரிதல் இல்லை.

தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அனேகர் தமிழ்க் கிறித்தவ மக்கள். சிங்கள கிறித்தவர்கள் அதிகளவில் பாதிக்கப்படவில்லை. இந்த நிலையில் தென்பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது பௌத்த சிங்கள மக்கள் ஏன் தாக்குதல் நடத்த வேண்டும்? பாதிக்கப்பட்ட தமிழர்கள் எவரும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தவில்லையே? 30 வருட போரின் வலியைக் கண்ட மக்கள் மற்றுமொரு சமூகம் தாக்கப்படுவதை அனுமதிக்க விரும்பாது. பூகோள அரசியல் போட்டிக்குள் தற்போது சிக்குண்டுள்ள இலங்கை மக்கள், 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் ஈழப்போரின் மத்தியிலும் எப்படியான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பது பற்றி சிங்கள அரசியல்த் தலைவர்கள் சிலர் தற்போது கூறி;ப் பெருமைப்பட ஆரம்பித்துவிட்டனர்.

இது மனச்சாட்சியின் வெளிப்பாடு மாத்திரமல்ல. பத்தாண்டு நிறைவில் பட்டறிவின் காலம் பிந்திய ஞானமும் கூட. விடுலைப் போராட்டத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையேயான வேறுபாடுகளை 2001 ஆம் ஆண்டு அமெரிக்கத் தாக்குதல் நடந்த பின்னர் சீர்தூக்கிப் பாத்திருந்தால், இலங்கை மாத்திரமல்ல இலங்கையில் கால்பதிக்க துடிக்கும் மேற்குலகமும் நிம்மதியடைந்திருக்கலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *