Search
Monday 26 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மனைவி, மகளை பறிகொடுத்து மகனை தேடி அலைந்து இறுதியில் பொலிஸ் பிணவறையில் உடலை அடையாளம் கண்ட பிரித்தானியர்

மனைவி, மகளை பறிகொடுத்து மகனை தேடி அலைந்து இறுதியில் பொலிஸ் பிணவறையில் உடலை அடையாளம் கண்ட பிரித்தானியர்

சங்ரி லா ஹோட்டலில் உணவு அருந்திக்கொண்டிருந்தபோது இடம்பெற்ற குண்டு தாக்குதலில் தனது மனைவியையும் மக்களையும் மகனையும் பறிகொடுத்த ஒரு பிரித்தானிய சட்ட ஆலோசகரான நிக்கல்சன் இந்த சம்பவத்தில் காணாமல் போன தனது 11 வயது மகன் அலெஸ்ஸை நேற்று முழுவதும் கொழும்பு முழுவதும் தேடி இறுதியில் இறந்த உடலை ஒரு பொலிஸ் பிணவறையில் கண்டுபிடித்த துயர சம்பவம் இடப்பெற்றுள்ளது.

குண்டு வெடித்தபோது சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிக்கல்சன் (43) தனது மனைவி அனிதா (41), மகள் அனாபெல் மற்றும் மன்னன் அலெஸ்சை தேடி அலைந்துள்ளார். பின்னர் பிற்பகலில் தனது மனைவி மற்றயும் மக்கள் ஆகியோர் இறந்ததை அறிந்துகொண்டார். ஆனால், மகன் காணாமல் பொய் இருந்தார். இந்த நிலையில், இலங்கையர் ஒருவரின் உதவியுடன் வைத்தியசாலை மற்றும் பிணவறைகளுக்கு சென்று தேடியும் மகனை காணவில்லை. நிக்கல்சனின் பரிதாப நிலையை கண்டு இலங்கையர்கள் பலரும் மகனை தேட உதவினார்கள். சஞ்சை ரவிச்சந்திரன் என்பவர், அலெக்சின் படத்தை போட்டு ” இவரை கண்டுபிடிக்க உதவுங்கள்.இவர் சங்கிரி லா ஹோட்டலில் இருந்தார். இவரது அம்மாவும் சகோதரியும் இறந்துவிட்டனர். தந்தை இவரை தேடி அலைந்து திரிகின்றார். வைத்தியசாலைகளிலோ பிண அறைகளிலோ இவரை காணவில்லை. தயவுசெய்து கண்டுபிடிக்க உதவுங்கள்” என்று இணையத்தில் விளம்பரம் செய்திருந்தார்.

இறுதியில் நிக்கல்சன் தனது மகனின் இறந்த உடலை பொலிஸ் பிணவறை ஒன்றில் கண்டுபிடித்தார்.

நிக்கல்சன் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகிய இருவரும் சிங்கப்பூரில் சட்ட ஆலோசகர்களாக பணியாற்றிவந்தனர். சிங்கப்பூருக்கு செல்ல முன்னர் நிக்கல்சன் பிரித்தானியாவில் திறைசேரியில் சட்ட ஆலோசகராக பணியாற்றி இருந்தார். இவர்கள் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள்.

Anita 1 Anita 2 anita 3


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *