Search
Monday 26 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மன்னாரில் சதேகத்துக்கு இடமான முறையில் ஹிஸ்புல்லா 508 ஏக்கர் காணி கொள்வனவு

மன்னாரில் சதேகத்துக்கு இடமான முறையில் ஹிஸ்புல்லா 508 ஏக்கர் காணி கொள்வனவு

மன்னார் ஓலைத்தொடுவாய் உவரி பகுதியில் உள்ள சுமார் 508 ஏக்கர் காணிகள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான நிறுவனத்தினூடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த காணிகள் கொள்வனவு தொடர்பாக பெரும் சந்தேகம் இருப்பதாகவும் இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஓலைத்தொடுவாய் உவரி காணிப்பகுதிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை சென்ற சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் 508 ஏக்கர் காணியை பார்வையிட்டனர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா, மன்னார் ஓலைத்தொடுவாய் உவரி என்ற பிரதேசத்தில் உள்ள 508 ஏக்கர் காணியை செலான் பிஸ்னஸ் பிரைவேட் லிமிட்டட் எனும் பெயரில் கொள்வனவு செய்துள்ளார். அந்த நிறுவனத்தின் இயக்குனராக ஹிஸ்புல்லா இருக்கின்றார். அதன் பெயரில் 508 ஏக்கர் காணிகளை 2013ஆம் ஆண்டு கொள்வனவு செய்திருக்கின்றார்.

இந்த 508 ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்வதற்கு குறித்த நிறுவனத்திற்கு நிதி எவ்வாறு கிடைத்தது? குறித்த அரசியல்வாதிக்கு எந்த அரபு நாட்டிலிருந்து எந்த செல்வந்தர் நிதி வழங்கினார்? என்பது தொடர்பாக அரசாங்கம் உடனடியாக கவனத்திலெடுக்க வேண்டும்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்று ஜனாதிபதியினால் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. அதற்கு சவுதியை சேர்ந்த தனிப்பட்ட நபர் ஒருவர் ஹிஸ்புல்லாவிற்கும் அவருடைய மகனுக்கும் சொந்தமான நிறுவனம் ஒன்றிற்கு பெரும் தொகையான பணம் அனுப்பியிருக்கின்றார். அதன்மூலம் பல்கலைக்கழகம் கட்டப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள முஸ்லிம் மத பயங்கரவாத அமைப்புக்களால் கத்தோலிக்க மக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், கிழக்கு ஆளுநர் எந்த அடிப்படையில் 508 ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்தார்? அவருடைய உள்நோக்கம் என்ன? என்பது தொடர்பாக தேசிய புலனாய்வு உடனடியாக விசாரிக்க வேண்டும் என்பதுடன் அதற்குரிய நடவடிக்கையையும் எடுக்கவேண்டும்.

செலான் நிறுவனத்திற்கு எவ்வாறு இவ்வளவு பணம் கிடைத்தது என்பது தொடர்பாகவும் விசாரித்து இந்த காணிகளை அரச உடைமையாக்கி இப்பிரதேசங்களில் காணி இல்லாத மக்களுக்கு பகிர்ந்தளிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *