மன்னாரில் நெல் அறுவடை விழா

மன்னாரில் நெல் அறுவடை விழா

மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியமடு கிழக்கு விவசாய அமைப்பினரின் ஏற்பாட்டில் நேற்று திங்கள் காலை 10:30 மணியளவில் பெரியமடு கிழக்கு வயல் நிலத்தில் இடம்பெற்றது.

இவ் நெல் அறுவடைவிழாவில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும், மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களும் வடமாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் உத்தியோகபூர்வமாக நெல் அறுவடையை ஆரம்பித்துவைத்தனர், அத்தோடு நிகழ்வின் நிறைவில் பெரியமடு குளத்தினையும் அதனை அண்டிய விவசாய நிலங்களையும் அமைச்சர்களும் அதிகாரிகளும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

17309242_10212199655335725_525951991356207275_n 17353467_10212199648095544_756523701159079361_n 17362418_10212199642655408_5819786041198513435_n

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *