Search
Wednesday 19 December 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மன்னாரில் 175 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக விசேட சட்ட வைத்திய நிபுணர் தகவல்

மன்னாரில் 175 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக விசேட சட்ட வைத்திய நிபுணர் தகவல்

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப்பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விசேட சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏனைய அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளை மீட்கும் பணி இடம்பெற்று வருவருவதுடன், மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் மாதிரிகளை அமெரிக்காவிற்கு காபன் பரிசோதனைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று 84 ஆவது தடவையாக அகழ்வுப்பணிகள் இடம்பெற்றன. இதுவரை குறித்த வளாகத்தில் 175 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.அவற்றில் 169 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *