Search
Tuesday 14 August 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மன்னார் புதை குழி கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம்

மன்னார் புதை குழி கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பணியாற்றும் சட்டத்தரணிகள் குழாம் மன்னார் சதோச மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுவரும் மனித எச்சங்கள், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகத்தை வெளியிட்டுள்ளது.

மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுவந்த இந்த அகழ்வுப் பணிகள்  மாலை வரை முன்னெடுக்கப்பட்டது.இதன்போது இரண்டு முழு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதில் ஒன்று இரண்டு கைகளும் ஒன்றின் மேல் ஒன்று இருந்த நிலையில் காணப்படுவதால் அது கட்டப்பட்ட ஒன்றாக இருக்கலாம் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பணியாற்றும் சட்டத்தரணிகள் குழாம் கூறியுள்ளது.

அத்துடன் முன்னைய காலப் பகுதியில் இந்தப் பகுதியில் வைத்து தம்மை இராணுவத்தின் சோதனைக்கு உட்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றதாக மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை செபமாலை உள்ளிட்ட பிரதேச மக்களும் கூறியுள்ளனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 29 மண்டையோடுகளுடன் கூடிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டடோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணியொருவர் தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *