Search
Thursday 20 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகளை தெரிவு செய்யும் பணி ஆரம்பம்

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகளை தெரிவு செய்யும் பணி ஆரம்பம்

மன்னார் மனித புதைகுழியில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் இருந்து அதன் மாதிரிகளை, காபன் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க மன்னார் நீதிவான் ரி.சரவணராஜா முன்னிலையில் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டன.புதைகுழியை பார்வையிட உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பலர் வருகை தருகின்றனர். ஆனால் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியின்றி குறித்த பகுதியைப் பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை.

தற்போது வரை 280 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 274 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.நேற்றும் இன்றும், மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் ‘காபன்’ பரிசோதனைக்கு அனுப்ப சேகரிக்கப்பட்டுள்ளன.மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 6 பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அவற்றில் தற்போது 2 மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் எலும்புக்கூடுகளின் மாதிரிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(15)mannar-grave-191218-seithy (1) mannar-grave-191218-seithy (2) mannar-grave-191218-seithy (4)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *