தலைப்பு செய்திகள்

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் ஆய்வு முடிவுகளில் முரண்பாடுகள்-சி.வி.விக்னேஸ்வரன்

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் ஆய்வு முடிவுகளில் முரண்பாடுகள்-சி.வி.விக்னேஸ்வரன்

மன்னார் மனித புதைகுழி தொடர்பான கார்பன் பரிசோதனை அறிக்கையை ஏற்பதா, இல்லையா என்பது தொடர்பாக நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மனித எச்சங்கள் 500 வருடத்திற்கு முற்பட்டவை என கார்பன் பரிசோதனை அறிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் தற்போது இங்கு பெறப்பட்டுள்ள மனித எச்சங்கள் 50 வருடங்களுக்கு உட்பட்டவை என பரசீலித்துக் கூறுகின்றனர்.எவ்வாறு இது சாத்தியப்படும்? இதில் எங்கேயோ முக்கியமான பாரதூரமான தவறு நடந்திருக்கிறது. எனவே மனித எச்சங்கள் மீண்டும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் ஆய்வு முடிவுகளில் முரண்பாடுகள் காணப்படுவதானது, அதில் ஏதோ தவறுகள் உள்ளதைக் காட்டுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *