Search
Sunday 20 January 2019
  • :
  • :

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதிநிதிகள் பார்வை

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதிநிதிகள் பார்வை

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘சதொச’ வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வுப்பனியானது 115 ஆவது நாளாக இன்று சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.இந்நிலையில் மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதிநிதிகள் இருவர் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.குறித்த இருவரும் இன்று செவ்வாய்க்கிழமைகாலை 10.30 மணியளவில் நேரடியாக விஜயம் செய்து அகழ்வு பணிகளை பார்வையிட்டனர்.

இந்த நிலையில் அகழ்வு பணியை நேரடியாக பார்வையிட இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதி நிதிகள் இருவர் இன்று அகழ்வு இடம் பெறும் பகுதிக்குச் சென்று நேரடியாக அகழ்வு பணிகளை அவதானித்ததோடு, குறித்த மனித எலும்புக்கூடுகளின் அகழ்வு மற்றும் ஏனைய விபரங்கள் தொடர்பில் அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவிடம் கேட்டு அறிந்துகொண்டனர்.

இதேவேளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக தூதரக பிரதிநிதிகள் மனித புதைகுழியை பார்வையிட வந்த போது புலனாய்வுத்துறையினர் பலர் குறித்த பகுதியை சூழ்ந்து கொண்டதோடு, கையடக்கத்தொலைபேசிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.மேலும் இதுவரையில் 266 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அகழ்வுப்பணிகள் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.(15)1 2 4


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *