தலைப்பு செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் தொடரும் கடுமையான வறட்சி

மன்னார் மாவட்டத்தில் தொடரும் கடுமையான வறட்சி

மன்னார் மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனால், நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் பெரும்பாலான மீனவர்கள் வாழ்வாதாரம் இன்றி வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் பல குளங்கள் மற்றும் நீர்நிலைகளும் வற்றிய நிலையில் காணப்படுவதை அவதானிக்கமுடிகிறது.

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த வெப்பம் காணப்படுகின்றது.குறித்த வறட்சி நிலை காரணமாக மன்னார், மடு, மாந்தை, முசலி, நானாட்டான், ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்பில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக நானாட்டான் மற்றும் முசலி பிரதேசங்களை சேர்ந்தவர்களே அதிகம் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.97609815_sl

மன்னார் மாவட்டம் முழுவதிலும் 17 ஆயிரத்து 984 குடும்பங்களைச் சேர்ந்த 62 ஆயிரத்து 823 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிவாரண பிரிவினரால் இவர்களுக்கான தற்காலிக குடி நீர் வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக வறட்சியால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரத்து 860 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 280 நபர்களுக்கு குடிநீர் வழங்கப்படுகின்றது.ஒரு நாளைக்கு சுமார் 1 இலட்சத்து 45 ஆயிரம் லீற்றர் தண்ணீர் பௌசர்கள் ஊடாக குடி நீராக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.IMG_9547

கடுமையான வறட்சி காரணமாக மன்னார் மாவட்டம் முழுவதும் குளங்கள் மற்றும் வாய்கால் நீர் நிலைகள் என அனைத்தும் வற்றிய நிலையில் காணாப்படுவதினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிளும் உள்ள 104 கிராம சேவையாளர் பிரிவுகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைதுவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் கனக ரெட்ணம் திலீபன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *