Search
Friday 22 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மரக்கறி விலைகள் பாரியளவில் அதிகரிப்பு!

மரக்கறி விலைகள் பாரியளவில் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் விலைகளின்படி பாகற்காய் ஒரு கிலோ 300 ரூபாவாகும், கத்தரிக்காய் ஒரு கிலோ 120 ரூபாவுக்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 500 ரூபாவுக்கும், தக்காளி ஒரு கிலோ 180 ரூபாவுக்கும், போஞ்சி ஒரு கிலோ 180 ரூபாவுக்கும், கரட் ஒரு கிலோ 160 ரூபாவுக்கும், கோவா ஒரு கிலோ 160 ரூபாவுக்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 100 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலைமை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை தொடரக்கூடும் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *