Search
Thursday 5 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மரக்கறி விலைவகளில் வீழ்ச்சி

மரக்கறி விலைவகளில் வீழ்ச்சி

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்து வரும் மரக்கறி வகைகளின் தொகை அதிகரித்துள்ளது.
பல மரக்கறி வகைகளின் விலைகள் குறைவடைந்திருப்பதாக வர்த்தகர்கள் தெரிவத்துள்ளனர். தற்பொழுது தாழ்நில மரக்கறி வகைகள் பல மத்திய நிலையத்திற்கு கிடைத்து வருகின்றன. இதற்கு மேலதிகமாக போஞ்சியும் பெருமளவில் கிடைப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 தினங்களாக ஒரு கிலோ போஞ்சி 20.00 ரூபா தொடக்கம் 40.00 ரூபா வரையில் விற்பனையாவதால் மரக்கறி வகைகளின் விலைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. பெருந்தொகை மரக்கறி வகைகளை விற்பனை செய்யமுடியாமல் சில சந்தர்ப்பங்களில் திரும்ப வீட்டுக்கு எடுத்துச் செல்வதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கரட், லீக்ஸ், பீற்றூட் ஆகிய மரக்கறி வகைகள் தவிர்ந்த ஏனைய மரக்கறி வகைகள் 10.00 ரூபா தொடக்கம் 50.00 ரூபா வரையில் வெவ்வேறான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *