Search
Thursday 19 July 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மரண தண்டனையை அமுல்படுத்த அரசாங்கம் யோசனை

மரண தண்டனையை அமுல்படுத்த அரசாங்கம் யோசனை

போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றைய தினம் அமைச்சரவையில் யோசனையொன்றை முன்வைத்துள்ள நிலையில் அதற்கு அமைச்சர்கள் ஆதரவளித்துள்ளனர்.
அண்மை காலமாக நாட்டில் கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இதற்கு போதைப் பொருட்களே காரணமாக அமைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அதனை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் போதைப் பொருளுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக சிறைச்சாலையில் தற்போது மரண தண்டனையை விதிக்கப்பட்டிருக்கும் கைதிகள் சிலர் வெளியில் நடக்கும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அதனை கட்டுப்படுத்த மரண தண்டனையை விரும்பியோ , விரும்பாமலோ நிறைவேற்ற வேண்டிய தேவையுள்ளதாக ஜனாதிபதி நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *