Search
Friday 17 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மரண தண்டனையை அமுல்படுத்துவது என்ற இலங்கையின் தீர்மானத்துக்கு கவலை அடைகின்றோம்- பிரித்தானியா

மரண தண்டனையை அமுல்படுத்துவது என்ற இலங்கையின் தீர்மானத்துக்கு கவலை அடைகின்றோம்- பிரித்தானியா

மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது என்ற இலங்கையின் தீர்மானம் குறித்து கவலை அடைகின்றோம். ஆறு மாதங்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் மரண தண்டனையைப் பயன்படுத்துவது தொடர்பான உலகளாவிய தடைக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்தது.இந்த நிலையில், குறித்து கொள்கையை மாற்றியமைக்கும் வகையில் இலங்கை செயற்படுவது ஒரு பிற்போக்கு நடவடிக்கையாகும்.இது இலங்கையின் சர்வதேச நிலைப்பாட்டையும், சுற்றுலா தலமாகவும், வணிகத்திற்கான வளர்ந்து வரும் மையமாகவும் உள்ள அதன் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் என பிரித்தானியா எச்சரித்துள்ளது.

ந்நிலையில், மரண தண்டனை மீதான தடையை தொடருமாறு இலங்கைக்கு அழைப்பு விடுப்பதாகவும் மரண தண்டனையை அமுல்படுத்துவது, பயங்கரவாதத்தை எதிர்ப்பது உள்ளிட்ட சட்ட அமுலாக்கப் பிரச்சினைகளில் பிரித்தானியா இலங்கையுடன் ஒத்துழைப்பதை தவிர்க்க முடியாமல் மிகவும் கடினமாக்கும் எனவும் பிரித்தானியாவின் வெளியுறவு செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *