Search
Friday 24 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மரண தண்டனையை செயற்படுத்தும் தீர்மானத்திற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

மரண தண்டனையை செயற்படுத்தும் தீர்மானத்திற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை செயற்படுத்துவதற்கு எதிராக விடுக்கப்பட்டிருந்த நீதிமன்ற தடையுத்தரவு எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனையை செயற்படுத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தினால் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அந்த தடையுத்தரவை மார்ச் 20ஆம் திகதி வரை நீடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன மரண தண்டனை கைதிகள் சிலருக்கு அந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கையெடுத்திருந்த நிலையில் கடந்த மே மாதத்தில் சிவில் பிரதிநிதிகள் மற்றும் மரண தண்டனை கைதிகள் சிலரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை அடிப்படையாக கொண்டு உயர்நீதிமன்றத்தினால் இன்று வரையில் ஏற்கனவே அதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததுடன் மீண்டும் அந்த தடையை மார்ச் 20ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *