செய்திகள்

மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான வழக்கின் தீர்ப்பு விரைவில் – அனுமதி கிடைத்தால் நிறைவேற்றிவிட்டே போவேன் : ஜனாதிபதி

மரண தண்டனையை செயற்படுத்துவதற்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்குமாக இருந்தால் தனது பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டே செல்வேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் போதைப் பொருள் பிரச்சினை பாரதூரமானதாகவுள்ளது. இதனால் போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு நான் தீர்மானித்தேன். 4 பேரக்கு மரண தண்டனையை வழங்க நான் ஆவணத்தில் கையெழுத்திட்டேன். இன்னும் சில தினங்களில் அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. உயர்நீதின்ற நீதியரசர்கள் குழாம் என்ன தீர்ப்பை வழங்குவார்கள் என தெரியவில்லை. ஆனால் மரண தண்டனையை செயற்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதித்தால் எனது பதவிக் காலத்திற்குள் அதனை செய்தே நான் போவேன் என தெரிவித்துள்ளார். -(3)