Search
Wednesday 20 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மரண தண்டனை விவகாரம் ஐந்துபேர்கொண்ட நீதியரசர் குழாம் நியமனம்

மரண தண்டனை விவகாரம் ஐந்துபேர்கொண்ட நீதியரசர் குழாம் நியமனம்

ஜனாதிபதியால் உத்தரவிடப்பட்டு நிறைவேற்றப்படவிருக்கின்ற மரணதண்டனைக்கு எதிராக சுயாதீன ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்ன அடிப்படை மனித உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கையிலெடுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுக்களின்படி இலங்கையிலுள்ள மரண தண்டனைச் சட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா? தற்போதைய மரண தண்டனை நிறைவேற்றம் சர்வதேச மனித உரிமை விதிமுறைகளை மீறுகின்றதா? என்பது குறித்து ஆராயவுள்ளது.இந்நிலையில் நிறைவேற்றப்படவிருக்கும் மரண தண்டனைக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட மனுவை ஆராய்வதற்காக ஐந்துபேர்கொண்ட நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.இந்த நியமனத்தினை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றைய தினம் மேற்கொண்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *