Search
Saturday 7 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மலிங்கவை அணியில் சேர்க்காததற்கு இரசிகர்கள் கடும் எதிர்ப்பு

மலிங்கவை அணியில் சேர்க்காததற்கு இரசிகர்கள் கடும் எதிர்ப்பு

வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவை முக்கோண ரி20 தொடரில் விளையாடும் இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளாதது குறித்து பலத்த ஏமாற்றத்தை வெளியிட்டு வரும் இலங்கை இரசிகர்கள் தெரிவுக்குழுவின் தலைவர் கிரஹாம் லபரோயை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மலிங்கவை மீண்டும் கொண்டுவாருங்கள் என்ற பிரச்சாரத்தை டுவிட்டரில் ஆரம்பித்துள்ள இலங்கை அணியின் ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தையும் சீற்றத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்
இலங்கையின் மிகதிறமையான ஒரு வீரரை பழிவாங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறிஜயசேகரவும் அவரது சகாக்களும் பழிவாங்க முயல்கின்றனர் எனஅவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உங்களுடைய பாரிய தவறுகளை வெளிப்படுத்தியதற்காகவா மலிங்கவை புறக்கணிக்கிறீர்கள் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *