செய்திகள்

மலையகக் கட்சிகளை இணைத்து புதிய தமிழ்க் கூட்டமைப்பு: மனோ கணேசன் முயற்சி

வடக்கு, கிழக்கில் செயற்படுவதைப்போன்று தெற்கிலும் மலையகத்திலும் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைத்து புதிய தமிழ்க் கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஜனநாயக மக்கள் முன்னணி ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக ஜ.ம.மு. தலைவர் மனோ கணேசன் ஏனைய மலையகத்தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்திவருவதாகவும் தெரியவந்திருக்கின்றது.

பல்வேறு கொள்கைகளின் அடிப்படையில் தனித்தனியே இயங்கிய போதி லும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக வடக்கு, கிழக்குக் கட்சிகள் கூட்டிணைந்திருப்பதைப்போல், தெற்கிலும் மலையகத்திலும் செயற்படும் சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ்க் கூட்டமைப்பொன்று உருவாக வுள்ளது.

இது தொடர்பில் தென்னிலங்கை மற்றும் மலையக தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஜன நாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.  வெகுவிரைவில் புதிய தமிழ்க் கூட்டணி தொடர்பாக இறுதித் தீர்மானம் மேற்கொள் ளப்பட்டு அறிவிக்கப்படுமென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தென் பகுதிக்கான தமிழ்க் கூட்ட மைப்பு அமையப்பெற்றதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பொதுவானதொரு தேசிய தமிழ்க் கூட்ட மைப்பொன்றை ஏற்படுத்தி இலங்கையின் சகல பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்காக செயற்படுவது குறித்தும் மனோ கணேசன் ஆலோசித்து வருவதாகவும் தெரியவந்திருக்கின்றது.