Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மலையகத்திற்கு முறையான அபிவிருத்திகளை மேற்கொண்டது இ.தொ.கா மட்டுமே : ராமேஸ்வரன்

மலையகத்திற்கு முறையான அபிவிருத்திகளை மேற்கொண்டது இ.தொ.கா மட்டுமே : ராமேஸ்வரன்

மலையகத்திற்கான முறையான அபிவிருத்தி திட்டங்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினாலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதனையும் முழுமையாக முன்னெடுக்காதவர்களே இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். என பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
மலையகத்திற்கு பாரிய அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுத்து செல்லும் நோக்கில் தனிகிராமம் அமைப்பதற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டது அமரர் ஆறுமுகன் தொண்டமான்தான்.
கடந்த அரசாங்கத்தை போன்று அங்கு 25 வீடுகள் இங்கு 25 வீடுகள் என அமைக்கவில்லை. ஒரு தோட்டப் பகுதியில் 300 குடும்பங்கள் இருந்தால் அனைவருக்கும் வீடமைப்புத் திட்டத்தினை அமைக்க நடவடிக்கையினை முன்னெடுத்தார். இதனைதான் நாம் ஆறுமாத காலப்பகுதியில் முன்னெடுத்தோம்.
நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைகழகம் அமைக்கவேண்டுமென அரசாங்கத்திடம் கோரினார். அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிலர் தோட்ட தோட்டமாக கூறுகிறார்கள் நாம் ஒன்றுமே செய்யவில்லையென. மலையக மக்களுக்கு வாக்குரிமை பெற்றுகொடுத்தது எமது ஸ்தாபகத் தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான். இன்று இந்நாட்டில் நாம் சமமாக வாழும் உரிமையினை பெற்று கொடுத்ததும் செளமியமுர்த்தி தொண்டமான்தான்.
கடந்த அரசாங்கத்தில் இருந்தவர்கள் என்ன செயதார்கள்? ஆறுமுகன் தொண்டமானுடைய பெயர் பலகையினை மாற்றுவதைதான் முதன் முதலில் செய்தார்கள். 4000ம் வீடுகளை வழங்கியது இந்திய அரசாங்கம். அதனை கூட முழுமையாக அமத்து மக்கள் பாவனைக்கு வழங்காதவர்கள் இன்று எம்மை பற்றி விமர்சனம் செய்கிறார்கள்” – எனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *