Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மலையகத்தில் தோட்ட தொழிலாளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

மலையகத்தில் தோட்ட தொழிலாளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 306 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இன்று 10.02.2017 காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவில் தோட்ட தொழிலாளர்கள், கிராம மற்றும் நகர்புற மக்கள் காலை வேளையிலேயே வாக்களிக்க ஆரம்பித்தனர்.
இன்று காலை ஆரம்பித்த வாக்களிப்பில் நுவரெலியா மாவட்டத்தில் 504 வாக்களிப்பு நிலையங்களிலும் மக்கள் சென்று வாக்களித்து வருகின்றனர்.
மலையகத்தில் பெருந்தோட்ட பகுதிகளில் சில தோட்டங்களில் தொழிலாளர்கள் தங்களது ஒரு நாள் வேலையை நிறுத்தியவாறு வாக்களிப்புகளில் பங்குகொள்ளும், அதேவேளை சில தோட்டங்களில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று தேர்தல் ஆணையகத்தின் பிரகாரம் விடுமுறை பெற்று வாக்களிக்க சமூகமளித்துக் கொண்டிருப்பதை இங்கு காணக்கூடியதாக இருந்தது.
வாக்களிப்பு நிலையங்களுக்கருகில் பொலிஸ், இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வாக்களிப்பு வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதேவேளை கேகாலை , பதுளை , மாத்தளை , கண்டி , களுத்துறை , இரத்தினப்புரி மாவட்டங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்க முடிகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *