Search
Tuesday 7 April 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

”மலையக பல்கலைக்கழகம்” காணியை பார்வையிட்ட அமைச்சர் பந்துல

”மலையக பல்கலைக்கழகம்” காணியை பார்வையிட்ட அமைச்சர் பந்துல

மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக கொட்டகலை பகுதியில் சில இடங்களில் உயர்கல்வி அமைச்சர் பந்துலகுணவர்தன காணிகளை பார்வையிட்டார்.
இன்றைய தினம் அங்கு சென்ற அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினருடன் காணிகளை பார்வையிட்டார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துலகுணவர்தன கூறுகையில்,
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வியை தொடரக்கூடிய வகையில் பல்கலைக்கழகமொன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்திருந்தார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையின் பிரகாரம் வழங்கப்பட்ட அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பல்கலைக்கழகம் அமையவுள்ள இடத்தை பார்வையிடுவதற்காகவே இன்று கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டேன். இதன்படி கொட்டகலையிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம், பல்கலைக்கழக கல்லூரியாக தரமுயர்த்தப்படும்.
அதேபோல் கொட்டகலையில் சர்வ வசதிகளையும் கொண்ட பல்கலைக்கழகமொன்றும் அமைக்கப்படும். அமைச்சரவை அனுமதி பெற்றப்பட்டு, அடுத்தாண்டுக்கான பாதீட்டில் நிதி ஒதுக்கப்படும். பொயிறியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் உட்பட முக்கிய விடயங்களை அங்கு கற்று, கண்டுபிடிப்பாளர்களாகவும், நிர்மாணிப்பாளர்களாகவும் மாறுவதற்கான வாய்ப்பு தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இதன்மூலம் கிடைத்துள்ளது. சுதந்திரத்துக்கு பின்னர் மலையக மக்களுக்கு கிடைக்கும் சிறப்பானதொரு வரப்பிரதாசம் இதுவாகும். என்றார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *