Search
Sunday 20 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மழையால் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மழையால் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

வடக்கு , கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில தொடரும் சீரற்ற காலநிலையால் 20 மாவட்டங்களில் 250,000ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். .
இவர்களில் அதிகமனோர் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் 13 பிரதேச செயலாளர் பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் 15,000ற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 50,000 பேர் வரையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வடக்கில் மன்னர் , முல்லைத்தீவு , கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் 10,000 பேர் வரையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலையகத்தில் தொடரும் கடும் மழையால் பதுளை , நுவரெலியா , கண்டி , மாத்தளை , கேகாலை மற்றும் இரத்தினப்புரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *