Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மழை அதிகரிப்பு! பல இடங்களில் அனர்த்த எச்சரிக்கை

மழை அதிகரிப்பு! பல இடங்களில் அனர்த்த எச்சரிக்கை

இன்று முதல் நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடுமெனவும் இதன்போது ஏற்படக் கூடிய அனர்த்தங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக தெதுரு ஓயா , மீ ஓயா , அத்தனுகலஓய , களனி கங்கை , களுகங்கை , ஹிங்கங்கை , நில்வலா கங்கை ஆகிய ஆறுகளை அண்மித்த இடங்களிலும் மற்றும் தாழ்நில பிரதேசங்களில் வசிப்போரும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அந்த நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை இரத்தினப்புரி , கேகாலை , கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படலாம் எனவும் இதனால் அந்த மாவட்டங்களில் வசிப்பேர் இது குறித்தும் அவதானமாக இருக்குமாறும் அந்த நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *