Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சஜித் நேரில் சென்று உதவி

மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு  சஜித் நேரில் சென்று உதவி

கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் தொடர் மழை காரணமாக பல நீர் நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து குடிமனைக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளில் இருந்து வெளியேறி பொது இடங்களில் தங்கியுள்ளனர்.இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு நேரில் சென்று அவர்களுடன் கலந்துரையாடியதுடன் உணவுப் பொருட்களையும் வழங்கினார் சஜித் பிரேமதாஸ.

தேர்தலின் பின்னர் அமைதியாக இருந்த சஜித் பிரேமதாச தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் இறங்கியுள்ளார்.நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *