Search
Monday 18 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மஸ்தானுக்கு வழங்கப்பட்ட இந்து மத விவகாரத்தை இந்து மதத்தை சேர்ந்தவருக்கு வழங்குமாறு கோரிக்கை

மஸ்தானுக்கு வழங்கப்பட்ட இந்து மத விவகாரத்தை இந்து மதத்தை சேர்ந்தவருக்கு வழங்குமாறு கோரிக்கை

நேற்றைய தினம் பிரதி மற்றும் இராஜங்க அமைச்சர்கள் 7 பேருக்கு பதவிகள் வழங்கப்பட்ட நிலையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த காதர் மஸ்தான் எம்.பிக்கு இந்து மத விவகார பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
காதர் மஸ்தானுக்கு மீள் குடியேற்றம் , புனர்வாழ்வு , வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் இதில் இந்து மத விவகாரம் அவருக்கு பொறுத்தமற்றது எனவும் இதனால் அதனை இந்து ஒருவருக்கு வழங்குமாறும் அமைச்சர் மனோ காணேசன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் இந்த மத அமைப்புகளும் மற்றும் சிவில் அமைப்பினரும் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.
மற்றைய அமைச்சுகளை விட மத விவகாரம் அந்த மதத்துடன் தொடர்புடையவர்களுக்கே வழங்கப்படுவது பொறுத்தமானதாகும். இதனால் அதனை செய்யுமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இது தொடர்பான ஆர்ப்பாட்டங்களும் பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. என்பதும் குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *