Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மஹேல ஜயவர்தனவை வாக்குமூலம் வழங்குவதற்காக விசேட விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

மஹேல ஜயவர்தனவை வாக்குமூலம் வழங்குவதற்காக  விசேட விசாரணை பிரிவில்  முன்னிலையாகுமாறு அழைப்பு

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டித் தொடரின் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணம் செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை அணியின் உப தலைவராக செயற்பட்ட மஹேல ஜயவர்தனவை வாக்குமூலம் வழங்குவதற்காக விளையாட்டு அமைச்சின் விசேட விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நாளை காலை 9 மணிக்கு அவரை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை இன்று காலை 9 மணியளவில் குறித்த விசாரணை பிரிவில் முன்னிலையான இலங்கை அணியில் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார சுமார் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் 2011ம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயச் சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக விளையாட்டத்துறை அமைச்சின் விசேட பொலிஸ் விசாரணை பிரிவில் நாளை காலை ஆஜராகுமாறு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தனவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *