Search
Thursday 26 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் மீட்பு

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் மற்றும்  ஆடைகள் மீட்பு

முல்லைத்தீவு – மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நீதிபதியின் உத்தரவுக்கமைய இன்று வியாழக்கிழமை மேலதிக அகழ்வு பணிகள் முன்னெடுக்கபட்டன.இந்த அகழ்வின்போது சிதைவடைந்த மனித எச்சங்கள், துப்பாக்கி ரவைகள், இரண்டு பேருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஆடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மீட்கபட்ட தடயப் பொருட்கள் சட்ட வைத்திய பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளன.

அத்துடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தலைமையில் பொலிஸார், தடயவியல் பொலிஸார் மற்றும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினரின் பங்கு பற்றுதலுடன் குறித்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.மனித எலும்புகள் மீட்கப்பட்ட பகுதியில், மக்கிய நிலையில் பெண்களின் ஆடைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது (15)Mankulam-Hospital-Issue-4 Mankulam-Hospital-Issue-3 Mankulam-Hospital-Issue-2mangkulam2


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *