Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்காக நாளை முதல் பாடசாலைகள் திறப்பு

மாணவர்களுக்காக நாளை முதல் பாடசாலைகள் திறப்பு

கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் 113 நாட்களின் பின்னர் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை முதல் திறக்கப்படவுள்ளன.
நாளைய தினத்தில் தினத்தில் 5 , 11 மற்றும் 13ஆம் தர மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 29ஆம் திகதி முதல் பாடசாலைகள் திறக்கப்பட்ட போதும் அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் நாளை முதலே மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதேவேளை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 10 , 12 ஆம் தர மாணவர்களும் 27ஆம் திகதி முதல் 3 , 4 , 6 , 7 ,8 ,9ஆம் தர மாணவர்களும் மற்றும் ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் முதலாம் மற்றும் 2ஆம் தர மாணவர்களும் பாடசாலைகளுக்கு அழைக்கப்படவுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *