Search
Thursday 3 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மானிப்பாயில் நேற்று வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயம்

மானிப்பாயில் நேற்று வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயம்

ஆவா குழுவிலிருந்து பிரிந்த தனு ரொக் என்பவரது நண்பரின் வீட்டுக்குள்ளேயே ஆவா குழு புகுந்து தாக்குதலை நடத்தியது. அந்த வீட்டுக்குள் புகுந்து கடந்த வருடம் தாக்குதல் நடத்தப்பட்டது. இது இரண்டாவது தாக்குதலாகும். சம்பவத்தில் அந்த வீட்டுக்கு அருகாமையிலுள்ள வீட்டில் மேசன் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தவர் கை மற்றும் காலில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலக்கத் தகடுகள் மறைக்கப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களில் முகங்களை மூடிக் கொண்டு வந்த 9 பேர் கொண்ட கும்பலே மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் உள்ள வீட்டுக்குள் புகுந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *