Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மானிப்பாய் துப்பாக்கிச்சூடு நான்கு இளைஞர்கள் கைது

மானிப்பாய் துப்பாக்கிச்சூடு நான்கு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் – மானிப்பாய் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் நால்வரும் கொல்லப்பட்டவருடன் கையடக்க தொலைபேசி ஊடாக இறுதியாகத் தொடர்பு வைத்திருந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த நால்வரும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொடிகாமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தைப் பார்வையிடுவதற்காக இன்று காலை அவர்கள் நால்வரும் வேறு சிலருடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்திருந்தபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *