Search
Saturday 22 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மாற்று அரசியல் அணி ‘தமிழ் மக்கள் தேசிய கூட்டணி’ விக்னேஸ்வரன் தலைமையில் உருவானது

மாற்று அரசியல் அணி ‘தமிழ் மக்கள் தேசிய கூட்டணி’ விக்னேஸ்வரன் தலைமையில் உருவானது

கடந்த பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டுவந்த வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான “தமிழ் மக்கள் தேசிய கூட்டணி” இன்று ஞாயிறுக்கிழமை யாப்பாணத்தில் உருவாக்கப்பட்டது.

இந்த கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ரில்கோ விருந்தினர் விடுதியில் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன.

பூரணை நாளான இன்று காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலான சுப நேரத்திலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

தமிழ் மக்கள் கூட்டணி, ஈபீஆர்எல்எப், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசியக் கட்சி ஆகிய நான்கு கட்சிகளே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

மக்களுக்கு இந்த கூட்டணியின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துதல், இறுக்கமான ஒழுக்கமான கொள்கைதளம்பல் அற்ற வகையில் கூட்டணியை நடத்திச்செல்லுதல் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்குடிகள் ஆகிய நோக்கங்களுக்காக கூட்டணியின் 50 சதவீதமான பிரதிநிதித்துவத்தை தனது கட்சி வைத்திருக்க வேண்டும் என்பதில் விக்னேஸ்வரன் ஆரம்பம் முதலே உறுதியாக இருந்துவந்துள்ளார். இதன்காரணமாக கூட்டணி அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டபோதிலும், விக்னேஸ்வரனின் நோக்கங்களில் உள்ள நியாய தன்மையை புரிந்துகொண்டுள்ள ஏனைய கட்சிகள் தற்போது ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

இதேவேளை, ஐங்கரநேசன் தலைமையிலான பசுமை இயக்கமும் இந்த கூட்டணியில் இணைந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அது நடைபெறவில்லை. விக்னேஸ்வரனுடன் மாகாண சபை காலம் முதல் ஐங்கரநேசன் மிகவும் நெருக்கமான உறவை பேணிவந்துள்ள போதிலும், ஐங்கரநேசனின் உறுதியற்ற நிலைப்பாடுகள் காரணமாக அவரை தன்னுடன் இணைத்துச்செல்வதில் விக்னேஸ்வரன் அதிக சிரத்தை எடுக்கவில்லை என்று தெரியவருகிறது. ஆரம்பத்தில், EPRLF ஊடாக மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றபின்னர் தமிழரசு கட்சிக்கு அவர் தாவி இருந்தார். பின்னர் தற்போது தனது பசுமை இயக்கத்தின் ஊடாக தனியான அரசியல் செய்து வருகின்றார். விக்னேஸ்வரனுடன் கூட்டு சேர்வதற்கு பேச்சுவார்த்தை நடத்திய அதேசமயம், புளொட் அமைப்பின் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் முயற்சிகளை ஐங்கரநேசன் மேற்கொண்டமை ஊடகங்களில் வெளிவந்திருந்தது. இது சந்தர்ப்பவாத செயற்பாடுகள் குறித்த விக்னேஸ்வரனின் சந்தேகங்களை வலுவாக்கி இருந்ததால் அவரை கூட்டணியில் இணைப்பதற்கு விக்னேஸ்வரன் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், தனது கூட்டணி ஊடாக யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் சந்தர்ப்பத்தையும், கூட்டணியின் அரசியல் பீடத்தில் ஒரு பிரதிநிதித்துவத்தையும் வழங்குவதற்கு விக்னேஸ்வரன் ஆரம்பத்தில் முன்வந்திருந்தார். இது ஐங்கரநேசனுக்கு திருப்தி அளிக்கவில்லை. அவர் சம அந்தஸ்து கோரியிருந்தார். இந்த நிலையில், விக்னேஸ்வரனின் முன்னைய நிலைப்பாட்டை ஐங்கரநேசன் ஏற்றுக்கொண்டால் எதிர்வரும் வாரங்களில் இந்த கூட்டணியில் அவர் இணையும் வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கபப்டுகின்றது.

2 3 4 5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *