தலைப்பு செய்திகள்

மாளிகாவத்தை சம்பவம் தொடர்பாக கைதாகிய 7 பேரும் விளக்க மறியலில்

மாளிகாவத்தை சம்பவம் தொடர்பாக கைதாகிய 7 பேரும் விளக்க மறியலில்

கொழும்பு மாளிகாவத்தையில் நேற்று (21) நெரிசலில் சிக்கி ற மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 7 பேரை எதிர்வரும் ஜூன் மாதம் நான்காம் திகதி வரையில் விளக்கமறியளில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு – மாளிகாவத்தையில் நேற்றைய தினம் இடம்பெற்ற தனிப்பட்ட ரீதியில் பணம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். 68, 62, 59 வயதுடைய பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த நெரிசலில் சிக்கிய மேலும் 9 பேர் காயமடைந்;து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஊடரங்கு சட்டம் அமுவில் உள்ள வேளையில் பணப்பகிர்வு இடம்பெற்றிருப்தாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஊரடங்கு சட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை மீறியதாக அந்த பண பகிர்ந்தளிப்புடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *